திருச்செங்கோடு, ஏப்.18: திருச்செங்கோடு அருகே சித்தாளந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி(38). ரிக் வண்டியில் டிரில்லராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஈஸ்வரி(33) என்ற மனைவியும், தீபக் என்ற மகனும், ஹாஷிகா என்ற மகளும் உள்ளனர். வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்த கார்த்தி, 20 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்தார். தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம், உறவினரான வடிவேல் என்பவர், கார்த்தி வீட்டுக்கு வந்த போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், வெளியில் சென்றிருந்த ஈஸ்வரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அக்கம்,பக்கத்தினர் கூரையை பிரித்து வீட்டிற்குள் இறங்கி பார்த்த போது, அங்கு சேலையில் தூக்கிட்டவாறு கார்த்தி சடலமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், திருச்செங்கோடு புறநகர் போலீசார், சம்பவ இடம் சென்று கார்த்தியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post ரிக் தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.
