×

சட்ட ஆணைய புதிய தலைவர் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி?

புதுடெல்லி: 22வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைதொடர்ந்து 23வது சட்ட ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி அமைக்கப்பட்டது. இதன் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் 23வது சட்ட ஆணையத்தின் தலைவர் நியமனம் குறித்து இந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் 23வது சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி நியமிக்கப்படலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்று 2023ம் ஆண்டு மே 14ம் தேதி ஓய்வு பெற்றார்.

The post சட்ட ஆணைய புதிய தலைவர் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி? appeared first on Dinakaran.

Tags : Justice ,Dinesh Maheshwari ,Law Commission ,New Delhi ,22nd Law Commission ,23rd Law Commission ,23rd Law Commission… ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தல்: காங். சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்