×

போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை; ஆவணங்களின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 ஆட்டோக்கள், 47 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

கோவை: கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் உரிய ஆவணங்களின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 ஆட்டோக்கள் மற்றும் 47 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தும் வாகனங்களை கண்டறியும் வகையில், பேரூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் சோதனை. கடந்த சில மாதங்களாக கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், முதல் முறையாக குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

The post போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை; ஆவணங்களின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 ஆட்டோக்கள், 47 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! appeared first on Dinakaran.

Tags : Govai ,Gowai Madukkari Endaravoli Nagar ,Beroor Cargo ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண்...