இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் தாயகம் திரும்பினர். கடந்த நவம்பர் 3ம் தேதி ராமநாதபுரம் நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 4 பேருக்கும் இலங்கை மதிப்பில் தலா 10,000 ரூபாய் அபராதம் விதிப்பு. இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மூலம் அபராதத் தொகை செலுத்தப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பைபர் படகுடன் 4 பேரும் தாயகம் திரும்பியுள்ளனர்.
