மஞ்சூர் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக உறை பனி நிலவி வருகிறது. கோரகுந்தா பகுதியில் புல்வெளிகள் அதிகம் உள்ள நிலையில் நேற்று காலை உறை பனி கொட்டியதில் புல்வெளிகளில் உப்பு கொட்டி வைத்தது போல் வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது. காலை நேரங்களில் மைனஸ் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுகிறது. மஞ்சூர், குந்தா பகுதிகளிலும் மாலை 3 மணிக்கெல்லாம் பனி விழ துவங்கி மறுநாள் காலை 9 மணி வரை நீடிக்கிறது. இதனால் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் உள்பட பலருக்கும் முகம், உதடுகள், கை, கால்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் போன்ற தொல்லைகளாலும் பலர் அவதிகுள்ளாகி வருகின்றனர். இதனால், சூடு தரும் வெம்மையாடைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
