×

அதிமுக-பாஜ கூட்டணி ஊழல் கூட்டணி இல்லை: எடப்பாடி பதில்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுக தலைமையிலான கூட்டணி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு ரெய்டுகளுக்கு பயந்து அதிமுகவை அடகு வைத்தவர்கள் என்று பொத்தாம் பொதுவாக புழுதிவாரி தூற்றுகிறார். என் மீதோ, எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீதோ மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் ரெய்டு நடத்தியதாக குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? அதிமுக – பாஜ கூட்டணியே ஊழல் என்ற ஒரு பெரிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருப்பது வேடிக்கை. 2026, சட்டமன்ற பொதுத்தேர்தலில் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அதிமுக-பாஜ கூட்டணி ஊழல் கூட்டணி இல்லை: எடப்பாடி பதில் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP alliance ,Edappadi ,Chennai ,General Secretary ,Edappadi Palaniswami ,Chief Minister ,M.K. Stalin ,led alliance ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்...