- ஜல்லிக்கட்டில்
- திண்டுக்கல் லியோனி
- எடப்பாடி
- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- சேலம் மத்திய மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி
- சுற்றுலாத்துறை அமைச்சர்
- ராஜேந்திரன்
- தமிழ்நாடு பாடநூல் சங்கம்
- ஜனாதிபதி
- தமிழ்
- நாடு…
ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, சேலம் மத்திய மாவட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், நேற்று கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பேசியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், கடந்த ஒரு மாதத்திற்குள் 3 முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்து விட்டார்.
திமுக கூட்டணிக்கு வெற்றி உறுதியாகி விட்ட நிலையில், ஒன்றிரெண்டு சீட்டு கிடைக்காதா? என்ற நப்பாசையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ஓடி வருகிறார். ஊருக்கு தகுந்தார் போல் பேசும் பிரதமர், மதுரைக்கு சென்று மீனாட்சியை சந்திக்காமல் திருப்பரங்குன்றத்திற்கு சென்றுள்ளார். சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது திமுக அரசு தான். வருமுன் காப்பவன் அறிவாளி, வந்த பின் தவிப்பவன் ஏமாளி என கலைஞர் கூறியுள்ளார். அதன்படி பாஜ அரசு செய்வதறியாது தவித்து வருகிறது.
சிலிண்டர் தட்டுப்பாடு என திமுக வதந்தி பரப்புவதாக கூறுகின்றனர். ஆனால் மக்கள் பிரச்னையை பேசுவது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான். திமுக தலைவர் ஸ்டாலின், ஒன்றிய அரசு கல்வி நிதி ஒதுக்காதது, ஜல் ஜீவன் நிதி ஒதுக்காதது, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், எய்ம்ஸ் முழுமையடையாதது, கீழடி முடிவுகள் வெளியிடாதது உள்ளிட்ட 5 கேள்விகளை கேட்டுள்ளார்.
ஆனால், தமிழ்நாட்டுக்கு வந்த மோடி இதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை. தற்போது சாப்பிட சாப்பாடு கேட்டால், 5 வயது குழந்தையாக இருக்கும் போது சோறு ஊட்டியதாக சொல்கிறார் மோடி. டப்பா என்ஜின் எடப்பாடியும் அதற்கு ஒத்து ஊதுகிறார். ஜல்லிக்கட்டில் இறந்தவருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என எடப்பாடி கூறுகிறார். ஆனால், அதே ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருக்கிறார். இதே நிலை சென்றால், எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு 2 பிரீஸர் பாக்ஸ் தருவேன் என்று கூட சொல்லுவார்.
அறிவாலயத்தில் கூட்டணி பற்றி பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் செல்கிறார். இதிலிருந்து யார் அடிமை? யார் சக்கரவர்த்தி? என்பதை மக்கள் முடிவெடுத்து விட்டனர். வரும் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
