×

சொன்னாரு..! செஞ்சாரு..!! சிறுபான்மையினர் கல்விநிறு​வனங்​களுக்​கு நிரந்தர அந்​தஸ்​துக்​கான சான்​றிதழ்

 

சொன்னாரு: சிறு​பான்​மை​யினர் மேம்​பாட்டை குறிக்​கோளாக கொண்டு செயல்​படும் தமிழ்நாடு அரசு அத்தகைய அரசு கல்வி நிறு​வனங்​களுக்கு நிரந்தர சிறு​பான்​மை​யினர் அந்​தஸ்​துக்​கான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது.

செஞ்சாரு: கலைஞர் தலைமையிலான அரசால் 1999ம் ஆண்டு இந்திய கம்பெனிகள் சட்டம் 1956ன் கீழ் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள் மற்றும் ஜெயின் ஆகியோர் நலனுக்காக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட்டது. இதன்மூலம் சிறுபான்மையினருக்கு சிறுவணிகம், வியாபாரம் மேற்கொள்ள குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கி வருகிறது. சிறுபான்மையின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இக்கழகம் தனிநபர் காலக்கடன், கைவினை கலைஞர்களுக்கான விரசாத்கடன், சிறுகடன், கல்விக்கடன் போன்ற கடனுதவிகளை வழங்கி வருகிறது.

2024-2025ம் ஆண்டில் இக்கழகத்தின் மூலம், ரூ.75 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இக்கழகத்தின் மூலம், சுயதொழில் தொடங்க தனிநபர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு, சிறுபான்மையினர் தகுதிச் சான்றிதழ் தொடர்புடைய துறைகளால் வழங்கப்பட்டு வந்த நிலையில், சான்றிதழ் பெறுவதை எளிதாக்கும் வகையிலும், துரிதமாக வழங்கவும், 2023ம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ், தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரம் அளிக்கப் பெற்ற குழுவின் ஒப்புதல் பெற்று, வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2024ம் ஆண்டு வரை இக்குழுவால் 6 முறை கூட்டங்கள் நடத்தப் பெற்று 159 கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கபட்டுள்ளது. அதில், 103 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மையினர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறுபான்மையினர் கல்வி நிறுவன தகுதிச் சான்றிழ்கள் பெற்ற நிறுவனங்களின் சார்பில் அதன் நிர்வாகிகள் கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற அதிகாரம் அளிக்கப்பெற்ற குழுவின் 7வது கூட்டத்தில் 160 கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில், 153 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த துறை மூலம் அப்போதுவரை 312 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 246 நிரந்தர அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்​சி​யாக குழு​வின் பரிந்​துரைப்​படி பிற்​படுத்​தப்​பட்​டோர், மிகப்​பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் நலத்​துறை சார்​பில் சிறு​பான்​மை​யினர் அந்​தஸ்து கோரி விண்​ணப்​பித்த கல்வி நிறு​வனங்​களில் 88 கல்வி நிறு​வனங்​களுக்​கு, நிரந்தர சிறு​பான்​மை​யினர் அந்​தஸ்​துக்​கான சான்​றிதழ்​களை, கடந்த பிப்ரவரி மாதம் சென்னை தலைமைச் செயல​கத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்​கி​னார்.

Tags : Sencharu ,Tamil Nadu government ,Kalaignar ,government ,
× RELATED கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு...