- விஜய்
- சைதப்பெட்டை, சென்னை
- திமுகா கூட்டணி கட்சி
- யூனியன் அரசு
- விடுதலை சிறுத்தை கட்சி
- திருமாவளவன்
- இந்தியா
சென்னை சைதாப்பேட்டையில் திமுக கூட்டணி கட்சி சார்பில் நேற்று சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டு கொள்ளாத ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: இந்தியா மட்டுமில்லை, உலகநாடுகள் முழுவதும் எரிபொருட்கள் தட்டுப்பாட்டால் பதற்ற நிலை உள்ளது. அண்ணாமலை அறியாமல் பேசுகிறார் என்றுதான் அர்த்தம். நாங்கள் அரசியல் செய்யவில்லை.
அண்ணாமலைதான் அரசியல் செய்கிறார். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது. அதிமுக-பாஜ இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. 2021 கூட்டணியையே அவர்களால் தக்க வைக்க முடியவில்லை. அதிமுக, பாஜ, விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைக்க முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. விஜய்க்கு அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்க முயற்சிகள் நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
நண்பர் விஜய் பாஜவிற்கு அடிபணிந்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும். பிற மாநிலங்களில் பாஜ, சங்பரிவார் நயவஞ்சகமாக கூட்டணி கட்சிகளை வளைப்பது போன்ற யுத்தியை கையாள்வர். அதை தமிழகத்திலும் செய்ய பார்க்கின்றனர். நண்பர் விஜய் அதற்கு இணங்க மாட்டார். தனது எதிர்காலத்தை சூனியமாக்கி கொள்ள மாட்டார் என நான் நம்புகிறேன். இடதுசாரிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டதாக கூறுகிறீர்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தையின் போது கூட்டணி கட்சிகள் இடையே மாறுபட்ட, முரண்பட்ட கருத்துகள் வருவது இயல்பு தான். ஆனாலும் இறுதியில் சுமுகதீர்வு காண்போம். இடதுசாரிகளின் கருத்தால் கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என இரண்டொரு நாளில் தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
