×

அமெரிக்க சூதாட்ட மோசடி இந்திய வம்சாவளி கவுன்சிலர் கைது

நியூயார்க்: அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் சூதாட்ட மோசடி கிளப்புகள் குறித்து திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில், இத்தாலிய அமெரிக்க மாபியா கும்பலுடன் சேர்ந்து கிளப்புகளில் மறைமுகமாக போக்கர் சூதாட்ட மோசடி செயல்பாடுகள் நடப்பது கண்டறியப்பட்டது. இதில் 39 பேரை கைது செய்தனர். இவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆனந்த் ஷாவும் (42) ஒருவர். இவர் நியூயார்க்கின் புறநகர் பகுதியான ப்ராஸ்பெக்ட் பார்க் பகுதியில் 2வது முறையாக நகராட்சி கவுன்சிலராக பதவி வகித்து வருபவர். அப்பகுதியில் வளர்ந்து வரும் அரசியல் தலைவராக அறியப்பட்ட ஆனந்த் ஷா சூதாட்ட மோசடியில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அமெரிக்க சூதாட்ட மோசடி இந்திய வம்சாவளி கவுன்சிலர் கைது appeared first on Dinakaran.

Tags : US ,New York ,New Jersey, USA ,Dinakaran ,
× RELATED மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்..!!