×

மத்திய ஐரோப்பாவில் பரவும் புதிய வைரஸ்: ஏராளமான கால்நடைகள் பலி; பல நாடுகளின் எல்லைகள் மூடல்

லெவல்: மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. அந்த நாட்டின் அருகில் உள்ள ஸ்லோவேக்கியாவில் 3 பண்ணைகளில் உள்ள கால்நடைகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நோய் பரவலை தடுக்கும் வகையில், இரண்டு நாடுகளின் இடையே உள்ள எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஹங்கேரியின் லெவல் நகரில் ஒரு பண்ணையில் நோய் பரவிய கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 3,000 மாடுகள் கொல்லப்பட்டுள்ளன.

கால் மற்றும் வாய் நோய் என்பது தொற்றும் வைரஸ் நோய். இது, மாடுகள், ஆடுகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் உள்ளிட்ட பிளவுபட்ட குளம்புகள் கொண்ட விலங்குகளை பாதிக்கிறது. இந்த நோய் நேரடி தொடர்பு, அசுத்தமான மேற்பரப்புகள் அல்லது காற்று வழியாகவும் வேகமாகப் பரவும். நோயை தடுக்க பண்ணைகளில் மருந்து தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஹங்கேரி மேற்கொண்டு வருகிறது.ஆஸ்திரியாவுடனான எல்லையை ஹங்கேரி மூடியுள்ளது. எந்த பாதிப்பும் இல்லாத போதும் ஆஸ்திரியா நாடு ஹங்கேரி,ஸ்லோவேக்கியாவுடனான எல்லைகளை மூடியுள்ளது. நோய் பாதிப்புக்கு அஞ்சி செக் குடியரசும் தனது எல்லைகளை மூடியுள்ளது.

The post மத்திய ஐரோப்பாவில் பரவும் புதிய வைரஸ்: ஏராளமான கால்நடைகள் பலி; பல நாடுகளின் எல்லைகள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Central Europe ,Central European ,Hungary ,Slovakia ,Dinakaran ,
× RELATED மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்..!!