×

லட்சுமிநரசிம்மர், ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி, ஏப்.10: கிருஷ்ணகிரி அருகே, துறிஞ்சிப்பட்டி கொத்துப்பள்ளி நரசிம்மர் மலையில் லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த 7ம் தேதி கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு, திருப்பாவை கோஷ்டி, திருவாராதனம், யாகசாலை பிரவேசம், பிரசாதம் வழங்குதல் நடந்தது. தொடர்ந்து காலை 5.30 மணிக்கு, சுப்ரபாதம் நடந்தது. காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து, காலை 11 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post லட்சுமிநரசிம்மர், ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Lakshmi Narasimha, Anjaneyar Temple Kumbabhishekam Ceremony ,Krishnagiri ,Narasimha Hill ,Kothupalli, Durinjipatti ,Thirupavai Koshiti ,Thiruvaradhanam ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை