×

மகாவீர் ஜெயந்தி நாளை டாஸ்மாக் கடைகள் மூடவேண்டும்: கலெக்டர் உத்தரவு

 

காஞ்சிபுரம், ஏப்.9: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்து மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம்(உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் மற்றும் உரிம நிபந்தனைகளின்படி, டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் கீழ்கண்ட நாளில் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்று அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாளை(வியாழக்கிழமை) மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (பார்) ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள் ஆகியவற்றை மூட வேன்டும் என்றும், விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

The post மகாவீர் ஜெயந்தி நாளை டாஸ்மாக் கடைகள் மூடவேண்டும்: கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : TASMAC ,Mahavir ,Kanchipuram ,Mahavir Jayanti ,Kanchipuram district ,Collector ,Kalaichelvi Mohan ,Kanchipuram district, Tamil Nadu… ,Jayanti ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...