×

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி மோகன் பகான்-பெங்களூரு அணிகள் இறுதிக்கு தகுதி

கொல்கத்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு, மோகன் பகான் – பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நடப்புத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு சுற்றுகளாக நடந்த அரையிறுதி ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த போட்டிகளின் முடிவில், மோகன் பகான், பெங்களூரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இறுதி ஆட்டம் வரும் 12ம் தேதி இரவு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. மோகன் பகான், பெங்களூர் என 2 அணிகளும் இந்த ஆட்டத்தில் 2வது முறையாக கோப்பையை வெல்ல களம் காணவுள்ளன.

The post ஐஎஸ்எல் கால்பந்து போட்டி மோகன் பகான்-பெங்களூரு அணிகள் இறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : ISL Football Tournament ,Mohun Bagan ,Bengaluru ,Kolkata ,Mohun Bagan- ,ISL football ,Indian Super League ,ISL ,tournament ,Dinakaran ,
× RELATED ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் வீழ்ந்தார் வீனஸ்