புதுடெல்லி: வக்பு வாரியங்களை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த முயலவில்லை. ஆனால் அவை சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்’ என பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறி உள்ளார். பாஜ கட்சியின் 46வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டில் டெல்லியில் பாஜ தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், ‘‘துருக்கி மற்றும் பல முஸ்லிம் நாடுகளில் வக்பு சொத்துக்களை அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. வக்பு வாரியங்களை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை. அதை நிர்வகிப்பவர்கள் சட்டத்தின் வரம்புகளுக்குள் செயல்படுவதையும், விதிகளுக்கு இணங்குவதையும் உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். வக்பு வாரியத்தின் சொத்துக்கள் மற்றும் நிதிகள் கல்வியை மேம்படுத்துவதற்கும், சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் அர்ப்பணிக்கப்படும்’’ என்றார்.
The post கட்டுப்படுத்த முயலவில்லை வக்பு வாரியங்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்: ஜே.பி.நட்டா பேச்சு appeared first on Dinakaran.
