சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவி சக்தி புகழ்வாணி அண்மையில் தான் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதி முடித்து விட்டு, முடிவுக்காக காத்திருந்தார். அத்துடன் நீட் தேர்வுக்காகவும் தனிப்பயிற்சி பெற்று வந்தார். மே மாதம் 4ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நாள்கள் நெருங்க, நெருங்க அதில் தம்மால் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியுமா என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, அதைத் தொடர்ந்து மார்ச் 28ம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, நேற்று முன்நாள் வியாழக்கிழமை எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, நேற்று புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி என ஒரு மாதத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.
நீட் தேர்வுக்காக ஏற்கனவே நடத்தப்பட்ட சட்டப் போராட்டங்களும், சட்டமியற்றும் முயற்சிகளும் தோல்வியடைந்து விட்ட நிலையில், அடுத்து தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? நீட் தேர்வை ரத்து செய்யவும், மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் அரசு அறிவிக்க வேண்டும்.
The post நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவி தற்கொலை மாணவர்களை காக்க என்ன திட்டம் உள்ளது? ராமதாஸ் கேள்வி appeared first on Dinakaran.
