×

கீழ்பவானி உரிமை மீட்பு கருத்தரங்கம்

 

ஈரோடு, ஏப். 5: ஈரோட்டில் கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் நல்லசாமி தலைமையில் நடந்தது. ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம், செயலாளர் நைனாமலை, இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் பொடாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாசன பயனாளிகள் பங்களிப்பை முன்னிறுத்தி, தமிழகத்தில் கட்டப்பட்ட அணை கீழ்பவானி அணை(பவானிசாகர்) அணையின் நீர் நிர்வாகம்,மழை நீர் அறுவடை திட்டம்.

நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் போன்றவை குறித்து வருகிற 15ம் தேதி ஈரோடு ஆக்ஸ்போர்ட்டு ஓட்டலில், கீழ்பவானி உரிமை மீட்பு கருத்தரங்கு நடத்துவது,கள்ளுக்கான தடையும், கடையும் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 13ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் சேராம்பட்டிலும்,20ம் தேதி தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், மாட்லாம்பட்டியிலும் மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கீழ்பவானி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post கீழ்பவானி உரிமை மீட்பு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Lower Bhavani Irrigation Beneficiaries Welfare Association ,Nallasamy ,United Farmers Union ,President ,Shanmugam ,Nainamalai ,Natural Rights Movement ,Podaran ,Dinakaran ,
× RELATED புகையிலை, மது விற்ற 3 பேர் கைது