- ஜே.கே.கே வேளாண் கல்லூரி
- ஈரோடு
- ஜே.கே.கே.முனிராஜா விவசாயக் கல்லூரி
- JKK
- நோய் தடுப்பு
- ரேபிஸ் தடுப்பூசி
- கால்நடை பராமரிப்பு துறை
- கோபிசெட்டிபாளையம், வெள்ளாளபாளையம்
ஈரோடு, ஜன. 8: ஜேகேகே முனிராஜா வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய கால்நடை கோமாரி நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது. கோபிசெட்டிபாளையம் பா.வெள்ளாளபாளையத்தில் கால்நடை பராமரிப்பத்துறை நடத்திய தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்ட கோமாரி நோய் தடுப்பூசி பணியில் ஜேகேகே முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் தனது ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் போது கால்நடை மருத்துவர் விஜயகுமாரி தலைமையில் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட உதவினர்.
மேலும் கோமாரி நோய் தடுப்பு குறித்து மக்களிடையே மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் இறுதியாண்டு மாணவர்களாகிய நந்தகுமார், கபில், கிருபாநிதி, சதீஷ்குமார், ஹரிஹரன், தர்ஷன், ஆதித்யன், அபிஜித், கௌதம்கரன், கோகுல்நாத், விஷ்ணு ஆகியோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர். இந்த கோமாரி நோய் தடுப்பு முகாம் ஏழாம் சுற்று என்பது குறிப்பிடத்தக்கது.
