அந்தியூர்,ஜன.10: அந்தியூர் அருகேயுள்ள புதுமேட்டூரை சேர்ந்த செல்வராஜ் மகன் மோகன்(21). கட்டிட தொழிலாளியான இவரும், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த சோமசுந்தரம் மகள் அபிதாவும்(21), கடந்த 3 ஆண்டுகளாக, இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி காதலித்து வந்துள்ளனர்.
அபிதாவின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததால், நேற்று முன்தினம், தஞ்சாவூரிலிருந்து அபிதா அந்தியூருக்கு வந்தார். அன்று மாலையே அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயிலில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து நேற்று இருவரும் பாதுகாப்பு கோரி அந்தியூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு குடும்பத்தாரிடமும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
