கோபி, ஜன. 10: கோபி பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக சார்பில் சீருடை வழங்கப்பட்டது. கோபி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பயணிகள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் சீருடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோபி நகர திமுக செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார்.மாநில நெசவாளர் அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி முன்னிலை வகித்தார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50 ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் பொங்கல் பரிசை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் குமணன், மாவட்ட திட்டகுழு உறுப்பினரும் நகர இளைஞரணி அமைப்பாளருமான விஜய் கருப்புசாமி, டி.என்.பாளையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கொங்கர்பாளையம் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
