×

விஇடி கல்லூரியில் ஒடிசி பாரம்பரிய நடன நிகழ்ச்சி

ஈரோடு, ஜன.9: ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்கலை மன்றம் சார்பில் இந்தியாவின் பாரம்பரிய நடன மரபுகளை மாணவர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் ஒடிசி பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கல்கத்தா சதாப்தி நிருத்தியாயன் கலைப் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 6 நடனக் கலைஞர்கள் பங்கேற்று, ஒடிசி நடனத்தின் பாரம்பரிய அழகையும் ஆழத்தையும் மாணவர்களுக்கு வெளிப்படுத்தினர்.

கல்கத்தாவைச் சார்ந்த சதாப்தி மல்லிக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது பார்வையாளர்களின் கலையார்வத்தை மேலும் உயர்த்தியது. நிகழ்வில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் சந்திரசேகர், கல்லூரியின் நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், யுவராஜா, கல்லூரியின் முதல்வர் நல்லசாமி, புலமுதன்மையர் லோகேஸ்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Tags : Odissi ,VET College ,Erode ,Fine Arts Council of Erode VET College of Arts and Science ,India ,Orissa… ,
× RELATED கோபி அருகே கஞ்சா விற்ற பெண் குண்டாசில் அடைப்பு