×

மது குடிப்பதற்காக பிஎஸ்என்எல் கேபிள் திருடியவர் கைது

வேலூர், ஏப்.4: வேலூரில் மது குடிப்பதற்காக பிஎஸ்என்எல் கேபிள் திருடி விற்றவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் பிஎஸ்என்எல் கோட்ட பொறியாளர் அரவிந்தன் வேலூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதில், வேலூர் மூங்கில் மண்டி பகுதியில் பிஎஸ்என்எல் கேபிள் அடிக்கடி திருடு போவதாகவும், இதனால் பிஎஸ்என்எல் சேவை பாதிக்கப்படுவதாகவும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த முகமது ஜாபர்(40) என்பவர் கேபிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மது அருந்துவதற்காக பிஎஸ்என்எல் கேபிளை திருடியது தெரியவந்தது.

The post மது குடிப்பதற்காக பிஎஸ்என்எல் கேபிள் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : BSNL ,Vellore ,Divisional Engineer ,Aravindan ,Crime Branch ,Vellore North Police Station ,BSNL… ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு...