×

ஈரோடு எஸ்.கே.சி. மாநகராட்சி பள்ளியில் பட்டமளிப்பு விழா

 

ஈரோடு,ஏப்.4: எஸ்.கே.சி.ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் யூ.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 244 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. மாணவ, மாணவிகள் 46 பேர் படித்து வருகின்றனர்.இங்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக்கல்வி போதிக்கப்படுகிறது.  இந்த நிலையில், இப்பள்ளியில் இந்த வருடம் யு.கே.ஜி. முடித்த 11 மாணவர்கள், 11 மாணவிகள் என மொத்தம் 22 பேருக்கு நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி தலைமை வகித்தார்.

பள்ளி மேலாண்மைக்குழுவினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பாராட்டினர். மேலும், பள்ளிக்கு கிரைண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களையும் நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்தனர்.தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post ஈரோடு எஸ்.கே.சி. மாநகராட்சி பள்ளியில் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Erode ,SKC Corporation School Graduation Ceremony ,UKG ,Corporation Middle School ,SKC Road ,LKG ,Erode SKC Corporation School Graduation Ceremony ,Dinakaran ,
× RELATED புகையிலை, மது விற்ற 3 பேர் கைது