×

விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

 

காஞ்சிபுரம் ஏப்.4: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனித்துவ அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்மை இணை இயக்குநர் முருகன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் அரசின் பல திட்டப் பலன்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

எனவே, இப்போது விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், கைபேசி எண், நில உடைமை விவரங்களையும் விடுபாடின்றி பதிவு செய்து தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணி சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், பொது சேவை மையங்களிலும் பதிவு செய்து பயன்பெறலாம்.

மத்திய, மாநில அரசின் திட்டங்களில் தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் இருந்தால் மட்டுமே விவசாயிகள் பிஎம் கிசான் நிதியின் மூலம் பயன்பெற முடியும். எனவே, எவ்வித கட்டணமுமின்றி வரும் ஏப்.15ம் தேதிக்குள் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Joint Director of Agriculture ,Murugan ,Kanchipuram district ,Joint Director of ,Agriculture Murugan ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...