- திருச்சி
- மாவட்ட கலெக்டர்
- பிரதீப் குமார்
- திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம்
திருச்சி, ஏப்.3: திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடந்த இலவச பயிற்சி வகுப்பில் பயின்று, போட்டித்தோ்வுகளில் வெற்றி பெற்று அரசுத்துறைகளில் பணி நியமனம் பெற்ற 23 பேருக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று நினைவு பாிசுகளை வழங்கி பாராட்டினார். திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மருத்துவ தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட மருந்தாளுநர் (Pharmacist) தேர்வுக்கு திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பணி நியமனம் பெற்ற 16 பேர்களுக்கும், 2024ம் ஆண்டில் டிஎன்பிசி-யால் குரூப்-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பணி நியமனம் பெற்ற 7 பேர்களுக்கும் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்களை தொிவித்தார்.
திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்த குரூப்-I முதல் நிலை தேர்வுக்கும் விரைவில் அறிவிக்கப்படவுள்ள குரூப்-IV தேர்வுக்கும் சிறப்பு பயிற்றுநர்களை கொண்டு அனைத்து பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித்தேர்வுகளும் நடத்தப்பட்டு, இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து போட்டித்தேர்வர்களும் இப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து, பயனடைய வேண்டும். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு 0431-2413510, 94990 55901, 94990 55902 என்ற திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொிவித்துள்ளார். நிகழ்ச்சியில், வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துணை இயக்குநா் மகாராணி, உதவி இயக்குநா் ரமேஷ் குமார், வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் பணி நியமன ஆணை பெற்றவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.
The post இன்று குட்டிக்குடி நிகழ்ச்சி தண்டவாளம் பராமரிப்பு பணி அரசு நடத்திய இலவச பயிற்சி வகுப்புகளில் பயின்று போட்டி தேர்வுகளில் வென்ற 23 பேருக்கு நினைவு பரிசு appeared first on Dinakaran.
