×

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு அமோக வரவேற்பு

திருச்சி, ஜன. 12: திருச்சி மாவட்ட ஓய்வூதியர்கள் சங்க அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. சங்கத்தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். சமீபத்தில் காலமான சங்க உறுப்பனர்களான கோட்ட பொறியாளர் ஆறுமுகம், உறையூர் ஆசிரியர் பெரியாபிள்ளை, ஆசிரியை ராஜலெட்சுமி ஆகியோர் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் தலைவர் வெங்கடாசலம் பேசுகையில், தமிழ்நாடு அரசு, பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAP) அறிவித்துள்ளது மகிழ்ச்சியான, வரவேற்கத்தக்கதாகும்.தமிழ்நாடு அரசு, ஓய்வூதியர்களுக்கான பிற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும் வரும் பிப்ரவரியில் சமர்ப்பிக்கும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்ப்புள்ளது. அரசு குடும்ப பாதுகாப்பு நிதி FSF அமல்படுத்தும் செயலில், அனுமதியை இனி அந்தந்த ஓய்வூதியம் வழங்கும் கருவூலமே தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது. இது ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

முன்னதாக மாவட்ட சங்க இணைச்செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். செயலாளர் முத்தையன், பொருளாளர் ராஜகோபால் உட்பட மண்ணச்சநல்லூர், சீரங்கம், துறையூர், லால்குடி, தொட்டியம் ஆகிய வட்டங்களின் புறநகர் துணைத்தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Trichy ,Trichy District Pensioners Association ,President ,Venkatachalam ,Divisional Engineer ,Arumugam ,Uraiyur Teacher Periyapillai ,Teacher ,Rajaletshmi ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...