×

துவரங்குறிச்சி அருகே சாலையில் கவிழ்ந்த மணல் ஏற்றிய டிராக்டர்

துவரங்குறிச்சி, ஜன. 9: திண்டுக்கல் மாவட்டம் செந்துறையில் இருந்து டிராக்டரில் எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் இறக்கி விட்டு மீண்டும் செந்துறை நோக்கி துவரங்குறிச்சி மணப்பாறை மாநில சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலை நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் சாலையில் கவிழ்ந்த டிராக்டரை தூக்கி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : Dhuvarankurichi ,Senthurai ,Dindigul district ,Trichy district ,Dhuvarankurichi Manapparai ,
× RELATED திருச்சியில் பொங்கல் பரிசு விநியோகம்