- சென்னை
- புதுச்சேரி ரயில்வே
- புதுச்சேரி
- விக்னேஷ்
- அரக்கோணம்
- ரனிபெட் மாவட்டம்
- சென்னை, புதுச்சேரி...
- புதுச்சேரி ரயில் நிலையம்
புதுச்சேரி, ஏப். 3: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (34). இவர் தனியார் மருந்து நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் புதுச்சேரிக்கு வேலை நிமித்தமாக வந்துள்ளார். வேலை முடிந்த பிறகு மீண்டும் சென்ைனக்கு செல்ல, புதுச்சேரி ரயில் நிலைய நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது விக்னேஷ் எடுத்து வந்த பேக்கில் லேப்டாப் மற்றும் ஐ-பேடு இருந்துள்ளது. விக்னேஷ் சற்று கண் அயர்ந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர், அவருடைய பேக்கை திருடி சென்றுள்ளார்.
சிறிதுநேரத்திற்கு பின் விக்னேஷ் எழுந்து பார்த்த போது பேக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். எங்கு தேடியும் கிடைக்காததால், ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர் ஒருவர் பேக்கை திருடி செல்வது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post புதுவை ரயில் நிலையத்தில் சென்னை வாலிபரிடம் ேலப்டாப், ஐ-பேடு திருட்டு appeared first on Dinakaran.
