×

இரண்டு மாதத்திற்குப் பிறகு இரவிகுளம் தேசிய பூஙகா திறப்பு: 80 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளதாக அதிகாரிகள் தகவல்

கேரளா : நீலகிரி வரையாடுகளின் இனப்பெருக்க காலம் காரணமாக மூடப்பட்டிருந்த இரவிகுளம் தேசிய பூங்கா இன்று திறக்கப்பட்டது. தென்னிந்திய காடுகளில் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரின பட்டியலில் முக்கிய இடத்தில் நீலகிரி வரையாடுகள் உள்ளது. இதனை பாதுகாக்கும் நோக்கத்தில் இரவிகுளம் தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது.

இத்தகைய தேசிய பூங்கா மிக உயரமான பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நிலவக்கூடிய தட்பவெப்ப நிலை மலை குன்றுகள் மற்றும் தாவர உணவு பொருட்கள் காரணமாக வரையாடுகள் இப்பகுதியை வாழ்விடமாக கொண்டுள்ளது. ஜனவரியிலிருந்து மார்ச் மாதம் வரை வரையாடுகள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் மார்ச் மாதம் வரை இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்க மாட்டார்கள்.

இந்த நிலையில் , இந்த ஆண்டும் ஜனவரி 31 ஆம் தேதி இந்த பூங்காவானது மூடப்பட்டது. தற்போது இனப்பெருக்க காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் இரவிகுளம் தேசிய பூங்கா திறக்கப்பட்டுள்ளது. மேலும் மூணாறு பகுதிக்கு சுற்றுலா வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு இரவிகுளம் தேசிய பூங்கா திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த பூங்கா திறக்கப்பட்டிருக்கும்.

 

The post இரண்டு மாதத்திற்குப் பிறகு இரவிகுளம் தேசிய பூஙகா திறப்பு: 80 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Iravikulam National Park ,Kerala ,South India ,Iravikulam National Park… ,Dinakaran ,
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்