×

திருச்சி அருகே மாணவியிடம் அத்துமீறல்: வாலிபர் போக்சோவில் கைது

ஜீயபுரம், ஏப்.2: திருச்சி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த புலிவலத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி மகன் விமல்ராஜா (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியின் வீட்டிற்கு கடந்த மாதம் 8ம் தேதி சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல் நடித்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமி கூச்சலிட்டதால் அங்கிருந்து விமல்ராஜா தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, விமல் ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

The post திருச்சி அருகே மாணவியிடம் அத்துமீறல்: வாலிபர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Jeeyapuram ,Chinnasamy ,Wimalraja ,Pulivalam ,Musiri ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...