×

ஒன்றிய அரசின் அமைச்சகங்களில் ஒரே துறையில் 8 – 9 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களால் ஊழல் அதிகரிப்பு: நாடாளுமன்ற நிலைக்குழு தகவல்

புதுடெல்லி: இதுதொடர்பாக பணியாளர், பொது குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த 27ம் தேதி தனது 145வது அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், “நிதி அமைச்சகம் உள்ளிட்ட பல அமைச்சகங்களிலும் பணியாற்றும் அதிகாரிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே அமைச்சகத்தில் பணியாற்றும் வகையில் சூழ்ச்சி செய்து பணியில் நீடிப்பது தெரிய வந்துள்ளது.

8 – 9 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களில் அதிகாரிகள் பணியில் உள்ளனர். மேலும், சில நிறுவன அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டபோதும், அதே இடத்தில் தங்கள் பதவியை தொடர்கின்றனர். இவ்வாறு ஒரே அமைச்சகம் அல்லது இடத்தில் நீண்டநாள் பணி புரிவது ஊழலை வளர்க்கிறது. எந்தவொரு அதிகாரியும் நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பை கடந்து பணியாற்றாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசின் அமைச்சகங்களில் ஒரே துறையில் 8 – 9 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களால் ஊழல் அதிகரிப்பு: நாடாளுமன்ற நிலைக்குழு தகவல் appeared first on Dinakaran.

Tags : Union government ,Parliamentary Standing Committee ,New Delhi ,Parliamentary Standing Committee on Personnel, Public Grievances, Law and Justice ,Parliament ,Finance Ministry ,Dinakaran ,
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!