×

நெய்வேலி அனல்மின் நிலையத்தை முற்றுகை தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

நாமக்கல், மார்ச் 30: கர்நாடகாவிற்கு மின் விநியோகத்தை தடை செய்யக்கோரி, 31ம்தேதி நெய்வேலி அனல்மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் ஏன தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடகா அரசு அணை கட்டும் திட்டத்திற்கு ₹9,000 கோடி நிதி ஒதுக்கி, தமிழக காவிரி டெல்டா உரிமையை பறிக்க முயற்சி செய்கிறது. இத்திட்டம் நிறைவேறினால் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில், 16 லட்சம் ஏக்கருக்கு மேல் விளைநிலம் பாசன வசதியின்றி பொய்த்துப் போகும். தமிழகத்தில் 22 மாவட்டங்கள் காவிரி குடிநீரையே நம்பியுள்ளதால், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதனால், தமிழகத்தில் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரம் ஒரு யூனிட் கூட கர்நாடகாவிற்கு கொடுக்காமல் இருளில் மூழ்கடிக்கும் வகையில், நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில், நாளை (31ம் தேதி) அனல்மின் நிலையம் முன் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post நெய்வேலி அனல்மின் நிலையத்தை முற்றுகை தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Farmers' Association ,Neyveli Thermal Power Plant ,Namakkal ,Karnataka ,Velusamy ,Neyveli Thermal ,Power Plant ,Dinakaran ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்