×

மதுவிற்ற பெண் கைது 25 பாட்டில்கள் பறிமுதல்

போச்சம்பள்ளி, மார்ச் 29: மத்தூர் அடுத்த கண்ணன்டஅள்ளி பகுதியில், டாஸ்மாக் மதுபானத்தை மொத்தமாக வாங்கி பதுக்கி பெண் ஒருவர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மத்தூர் போலீசாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு கண்ணன்டஅள்ளி பகுதியை சேர்ந்த தேவி (42) என்பவர், டாஸ்மாக் மதுபானங்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, 24 மணி நேரமும் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தேவியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மதுவிற்ற பெண் கைது 25 பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pochampally ,Kannandalli ,Mathur ,TASMAC ,Dinakaran ,
× RELATED வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்