×

டூவீலர் தீவைத்து எரிப்பு

தேன்கனிக்கோட்டை, மார்ச் 29: அஞ்செட்டியில் அரசு பள்ளி அருகே, டூவீலர் தீவைத்து எரிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அஞ்செட்டி அருகே உள்ள அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (45). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 26ம்தேதி காலை அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறமாக தனது டூவீலரை நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்த போது, மர்ம நபர்கள் அவரது டூவீலரு்க்கு தீ வைத்திருந்தனர். இதில் அவரது டூவீலர் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து லட்சுமணன் அஞ்செட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து டூவீலருக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

The post டூவீலர் தீவைத்து எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Thenkani Kottai ,Anchetty ,Lakshmanan ,Anumanthapuram ,Anchetty Government Higher Secondary School ,
× RELATED ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை