×

மருதமலை கோயில் குடமுழுக்கின்போது, சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழிலும் வேள்விகள் : அறநிலையத்துறை

சென்னை :கோவை மருதமலை கோயில் குடமுழுக்கின்போது, சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழிலும் வேள்விகள் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கின் போது, தமிழில் மந்திரங்கள் ஓத அனுமதி கோரி உப்பிலிபாளையத்தை சேர்ந்த டி.சுரேஷ்பாபு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கோவை மருதமலை முருகன் கோயிலில் ஏப்ரல் 4-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

The post மருதமலை கோயில் குடமுழுக்கின்போது, சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழிலும் வேள்விகள் : அறநிலையத்துறை appeared first on Dinakaran.

Tags : Maruthamalai ,temple ,Sanskrit: Charitable Trust Department ,Chennai ,Hindu Religious and Charitable Trust Department ,Madras High Court ,Maruthamalai temple ,Coimbatore ,T. Suresh Babu ,Uppilipalayam ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்