×

கூட்டுறவு மேலாண் நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல், மார்ச் 27: நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையத்தில், பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையத்தில், பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறுகிறது. இப்பயிற்சி வரும் 15ம்தேதி தொடங்குகிறது. பயிற்சிக்கான விண்ணப்பம், வரும் 13ம்தேதி வரை பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும். ₹118 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம்.

இரண்டு மாதம் நடைபெறும் இப்பயிற்சிக்கான கல்வித்தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 17 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இதற்கான பயிற்சி கட்டணம் ₹4,550. இந்த கட்டணத்தில், தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். இதில் 40 மணி நேரம் வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேரம் செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி முடித்தபின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும், நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்பு உள்ளது. மேலும் விபரங்களுக்கு, நாமக்கல்-சேலம் ரோட்டில், முருகன் கோயில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தை அனுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கூட்டுறவு மேலாண் நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Cooperative Management Center ,Namakkal ,Namakkal Cooperative Management Center ,Joint Secretary ,Namakkal Regional Cooperative Societies ,Arularasu ,Dinakaran ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்