×

தமிழ்நாடு குறித்து தவறான தகவல் ஒன்றிய அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல்: காங். நோட்டீஸ்

புதுடெல்லி: மக்களவையில் நேற்று முன்தினம் 100 நாள் வேலை திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மாசானி, 7 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டிற்கு, 20 கோடி மக்கள் தொகை கொண்ட உபிக்கு இணையாக ரூ.10,000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.7,414 கோடியும், உபிக்கு ரூ.9,758 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, இத்திட்டத்திற்கான நிதி வேலைகளின் அடிப்படையில் நியமிக்கப்படுகிறதே தவிர, மக்கள்தொகை அடிப்படையில் அல்ல. இவ்வாறு அவைக்கு தவறான தகவல் அளித்ததாக அமைச்சர் பெம்மாசானிக்கு எதிராக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நேற்று உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்தார்.

The post தமிழ்நாடு குறித்து தவறான தகவல் ஒன்றிய அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல்: காங். நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Minister ,Congress ,New Delhi ,Lok Sabha ,Union Minister of State ,Chandra Shekhar Bemmasani ,Tamil ,Nadu ,UP ,Dinakaran ,
× RELATED திருவனந்தபுரத்தில் சத்யாகிரக...