×

வாக்காளர் பட்டியலை பிழைகள் இல்லாமல் தயாரிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு டெல்லியில் பயிற்சி தொடக்கம்

சென்னை: வாக்காளர் பட்டியல்களை பிழைகள் இல்லாமல் தயாரிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு டெல்லியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் தேர்தல் ஆணையர் விவேக் ஜோஷியுடன் இணைந்து முதல் வாக்குச்சாவடி அலுவலர் பயிற்சியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.

அடுத்த சில ஆண்டுகளில் 10 வாக்குச் சாவடிகளுக்கு சராசரியாக ஒரு வாக்குச்சாவடி அலுவலர் என்ற அடிப்படை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் இந்த பயிற்சி திட்டங்களில் பயிற்சி பெறுவார்கள். நன்கு பயிற்சி பெற்ற வாக்குச்சாவடி அலுவலர்கள் நாடு முழுவதும் சட்டமன்ற அளவிலான முதன்மை பயிற்சியாளர்களை உருவாக்குவார்கள், அவர்கள் 100 கோடி வாக்காளர்களுக்கும் ஆணையத்திற்கும் இடையிலான முதல் மற்றும் மிக முக்கியமான இடைமுகமாகும். இந்த தனித்துவமான திறன் மேம்பாட்டு திட்டம் சில கட்டங்களாக தொடரும், முதலில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களை மையமாக நடைபெறும்.

தற்போது, ​​பீகார், மேற்குவங்கம் மற்றும் அசாமில் இருந்து 109 வாக்குச்சாவடி அலுவலர்கள் இந்த 2 நாள் குடியிருப்பு பயிற்சி திட்டத்தில் பங்கேற்பார்கள். அவர்களுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 சட்டமன்ற தேர்தல் அதிகாரிகள் மற்றும் 13 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்) பங்கேற்கின்றனர். இவர்களுக்கு, வாக்காளர் பட்டியல் பிழைகள் இல்லாமல் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் மற்றும் ஒரு தொகுதியில் சாதாரணமாக வசிப்பவர்கள்கூட வாக்காளர்களாக பதிவு செய்ய முடியும் என்பதை தலைமை தேர்தல் ஆணையர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வாக்காளர் பட்டியலை பிழைகள் இல்லாமல் தயாரிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு டெல்லியில் பயிற்சி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chennai ,Tamil Nadu Chief Election Office ,Indian International Institute for Democracy and Election Management ,Delhi… ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...