×

திருச்சியில் மார்ச் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

திருச்சி, மார்ச் 26: திருச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 28ம் தேதி நடைபெற உள்ளது. நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் மார்ச் 28ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நோிலோ, மனுக்கள் மூலமாகவோ தொிவிக்கலாம். மேலும் விவசாயப் பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post திருச்சியில் மார்ச் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers' Grievance Redressal Day ,Trichy ,District Collector ,Pradeep Kumar ,Dinakaran ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...