×

கிரிக்கெட் சூதாட்டம் இலங்கையில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை

கொழும்பு: இலங்கையின் கண்டியில் கடந்த 2024ம் ஆண்டு லெஜண்ட் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது மேட்ச் பிக்சிங் செய்ய முயன்றதாக இலங்கை தேர்வாளர்கள் தலைவர் உபுல் தரங்கா புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் இந்தியரான யோகி படேல் என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட யோகி படேல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மே மாதம் நிபந்தனை ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மாதாலேவில் உள்ள உயர்நீதிமன்றம் யோகி படேலுக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

The post கிரிக்கெட் சூதாட்டம் இலங்கையில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,2024 Legends League ,Kandy, Sri Lanka ,Upul Tharanga ,Yogi Patel… ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்