×

தனியார் பெட்ரோல் பங்கில் ரூ.28 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்ட மேலாளர் கைது

 

பெரம்பலூர், மார்ச் 21: பெரம்பலூர் 4ரோடு தனியார் பெட்ரோல் பங்கில் முறைகேடாக ரூ.28,46,764-ஐ மோசடி செய்த மேனேஜரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரம்பலூர் நான்குரோடு பகுதியில் அரியலூர் மாவட்டம், ராஜாஜி நகரைச் சேர்ந்த மருதமுத்து மகன் கஜேந்திரன் (61) என்பவர் (சரவண பாலாஜி ஏஜென்சிஸ் என்ற பெயரில்) பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

இவரது பெட்ரோல் பங்கில் சீனியர் மேனேஜராக கடந்த 2022-ம் ஆண்டு முதல் பணி செய்து வந்த, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுக்கா, கிளியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி மகன் சதீஷ் (37) என்பவர் மேற்படி பெட்ரோல் பங்கில் முறைகேடாக கணக்கில் காட்டப்படாமல் ரூ.28,46,764 பணத்தை நம்பிக்கை மோசடி செய்த தாக கஜேந்திரன் பெரம்பலூர் மாவட்டக் குற்றப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் பாட்ஷா வழக்குப் பதிவு செய்து, பெட்ரோல் பங்க் சீனியர் மேனேஜரான சதீஷ் என்பவரை கைது செய்து நேற்று (20ம் தேதி) பெரம்பலூர் மாவட்ட தலைமைக் குற்ற வியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.

The post தனியார் பெட்ரோல் பங்கில் ரூ.28 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்ட மேலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambalur ,District Crime Branch police ,Perambalur 4th Road ,Ariyalur district ,Rajaji… ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...