×

வேப்பூர் கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் என் வாக்குசாவடி வெற்றி சாவடி ஆலோசனை கூட்டம்

குன்னம், ஜன.10: பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி- தமிழ்நாடு தலைகுனியாது ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் அழகு நீலமேகம்பேசுகையில், ஒன்றிய அளவில் கட்சி செயல்பாடுகள், தேர்தல் கள நிலவரம், திமுகவிற்கு மக்களின் ஆதரவு, மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக ளில் தெருமுனை கூட்டங் கள், வீடு வீடாகச் சென்று கலந்துரையாடல்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு பணி கள் ஆகியவற்றில், அடித் தட்டு அளவில் அனைவரும் ஈடுபடவேண்டும்.

மேலும் கழக தொண்டர்களையும் இந்த பணியில் ஈடுபடுத்த வேண்டும். அனைத்து வாக் குச்சாவடிகளையும் திமுக வின் வெற்றி வாக்குச்சாவடி யாக பலப்படுத்த வேண்டும். 2021-ம் ஆண்டு வாக்பதிவான குச்சாவடிகளில் வாக்குகளை கூட, வருகிற சட்டமன்ற தேர்தலில் கூடு தல் வாக்குகள் திமுக வேட் பாளர்களுக்கு பதிவாகும் படி பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவ டிகளையும் தங்கள் கட்டுப் பாட்டிற்கு கொண்டு வந்து, வெற்றி வாக்குச்சாவடியாக மாற்ற தீவிர பிரசாரம் மேற் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் சன்.சம்பத் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் கருணாநிதி மாவட்ட பிரதிநிதி சண்முகம் முன்னாள் ஊராட்சி செயலாளர் சுப்ரியா வெங்கடேசன் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி சிவனேசன் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அன்புச்செல்வன் தங்க விஸ்வநாதன் அக்ரி சத்யராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Tags : Vepur East Union DMK ,Kunnam ,Perambalur District ,Tamil Nadu ,Taalikuniadu ,Meeting ,Union ,Azhughu Neelamegam ,DMK ,
× RELATED சமவேலைக்கு சமஊதியம் வழங்கக்கோரி...