அரியலூர், ஜன.14: அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் சாஸ்திரி உத்தரவுபடி அரியலூர் மான்ஃபோர்டு பள்ளியில் மாணவர்களுக்காக பயன்படுத்தும் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு அரியலூர் போக்குவரத்து காவல்துறையின் சார்பாக 37 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2026 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 8 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உள்ள 80க்கும் மேற்பட்ட பள்ளி வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
