×

8 மையங்களில் நீட் பயிற்சி 2ம் தேதி முதல் நடக்கிறது வேலூர் மாவட்டத்தில்

வேலூர், மார்ச் 20: வேலூர் மாவட்டத்தில் 8 மையங்களில் 266 அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வரும் 2ம் தேதி தொடங்க உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, ஆதிதிராவிடர், நகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் பயிற்சி வகுப்புகள் வரும் 2ம் தேதி முதல் மே மாதம் 2ம் தேதி வரை வேலூர் மாவட்டதிலுள்ள 8 மையங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணைக்கட்டு, திருவள்ளூவர் மேல்நிலைப்பள்ளி குடியாத்தம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கே.வி.குப்பம், அரசு மேல்நிலைப்பள்ளி கணியம்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி காட்பாடி, இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி பேரணாம்பட்டு, அரசு மேல்நிலைப்பள்ளி கொணவட்டம், அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வேலூர் ஆகிய 8 மையங்களில் நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் 266 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். நீட் தேர்வில் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பயிற்சி கையேடுகள் வழங்கியும், சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தும் மேலும், அப்பயிற்சியின் போது தினந்தோறும் அலகுத் தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 8 மையங்களில் நீட் பயிற்சி 2ம் தேதி முதல் நடக்கிறது வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,Collector ,NEET ,Subbulakshmi ,Vellore district… ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு...