- ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்
- சிப்காட் தொழில்துறை எஸ்டேட்
- காஞ்சிபுரம்
- இந்திய தர நிர்ணய ஆணையம்
- வல்லம்
- Vadakal
- BIS
- ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் சிப்காட் தொழிற்பேட்டை
- தின மலர்
காஞ்சிபுரம்: ஐஎஸ்ஐ முத்திரையின்றி உற்பத்தி செய்த ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வல்லம் வடகல், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அலுமினியம் அலாய் இங்காட் உற்பத்தியாளரின் வளாகத்தில் இந்திய தரநிர்ணய அமைவன அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை செய்தனர். 2016ம் ஆண்டு பிஐஎஸ் மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் வல்லம் வடகலில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அலுமினிய அலாய் இங்காட் உற்பத்தியாளரின் வளாகத்தில், இந்திய தர நிர்ணய அமைவன சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் குழு, நேற்று சோதனையில் ஈடுபட்டனர். பிஐஎஸ் சட்டம் 2016ன் பிரிவு 28ன்கீழ் இணை இயக்குநர் அருண் புச்சகாயாலயா, இணை இயக்குநர் ஜித் மோகன் மற்றும் பிஐஎஸ் அதிகாரிகள் குழு நடத்திய நடவடிக்கையின் போது அலுமினியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவைகள் (தரக் கட்டுப்பாடு) உத்தரவு 2023ஐ மீறியதற்கான சான்றுகள் சேகரிக்கப்பட்டன.
மேற்கண்ட தரக்கட்டுபாட்டு உத்தரவின்படி 2023ஐ மீறியதற்கான சான்றுகள் சேகரிப்பட்டன. மேற்கண்ட தரக்கட்டுபாடு உத்தரவின்படி எந்தவொரு உற்பத்தியாளரும் செல்லுபடியாகும். பிஐஎஸ் உரிமத்தின் கீழ் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல் அலுமினியம், அலுமினிய உலோகக் கலவை இங்காட்கள் அல்லது வார்ப்புகளை உற்பத்தி செய்யவோ, சேமிக்கவோ அல்லது விற்கவோ முடியாது. நிறுவனம் அலுமினியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவை உத்தரவு 2023ஐப் பின்பற்றாமல் பிஐஎஸ் சட்டம் 2016ன் பிரிவு 17ஐ மீறியுள்ளது. குற்றவாளிகள் மீது இந்திய தர நிர்ணய அமைப்பு சட்டம் 2016-ன் கீழ் பிஐஎஸ் மூலம் நடவடிக்கை சென்னை கிளை அலுவலகத் தலைவர் பவானி தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றத்திற்கு முதல் மீறலுக்கு பிஐஎஸ் சட்டம் 2016ன் பிரிவு 29ன்படி இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.2 லட்சத்திற்கு குறையாத அபராதம் விதிக்கப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பொருட்கள் தயாரிக்கப்பட்ட அல்லது விற்கப்படும், ஒட்டப்படும், பொருட்களின் மதிப்பில் பத்து மடங்கு வரை நீட்டிக்கப்படலாம். எனவே பொதுமக்கள் எவரேனும் இதுபோன்ற தகவல் தெரிவிந்தால் பிஐஎஸ், சென்னை அலுவலகம், சிஐடி வளாகம் 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை 600 113 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம். பிஐஎஸ் கேர் செயலியைப் பயன்படுத்தியோ அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தகவல்களின் ஆதாரதம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும். பிஐஎஸ் இணையதளம் www.bis.gov.in மற்றும் ஆகியவை பற்றிய பொதுவான தகவல்கள் உங்களுக்கு உதவும்.
The post ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் சிப்காட் தொழிற்பேட்டையில் ஐஎஸ்ஐ முத்திரையின்றி உற்பத்தி செய்த அலுமினியம் உற்பத்தி வளாகத்தில் சோதனை appeared first on Dinakaran.
