×

முதலமைச்சர் பிறந்தநாள் விழா ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினார்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் நடந்த முதலமைச்சர் பிறந்தநாள் பொதுகூட்டத்தில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கீதா ஜீவன் ஆகியோர் வழங்கினர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நகராட்சிக்குட்பட்ட நந்திவரம் திரவுபதி அம்மன் கோயில் திடலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், நகர செயலாளரும், நகர மன்ற தலைவருமான கார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராமுஜிஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் ஜார்ஜ், நகர நிர்வாகிகள் அப்துல்காதர், மதிராஜி, ஹரி, ரவி, டில்லி, குமரவேல், சதீஷ்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற துணை தலைவர் லோகநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பிரபுகஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு ஏழைகளுக்கு தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர். அப்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘கடந்த 26ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்ந்து நடைபெறும். சசிகலா காலில் விழுந்த பிறகுதான் எடப்பாடி என்ற ஒருவர் இருக்கிறார் என்பது தெரியும். ஆனால், தளபதி மு.க.ஸ்டாலின் 14 வயதிலேயே பொது வாழ்விற்கு வந்தவர். கடந்த 58 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து புரட்சி செய்ததில் இந்தியாவுக்கே அவர் யார் என்று தெரியும். ஒரு ஆண்டு காலம் தளபதி மிசாவில் இருந்தவர்.

ஆனால், சீமானை போன்றவர்கள் ஒரு வாரம் கூட சிறையில் தாக்கு பிடிக்க மாட்டார்கள். படிப்படியாக வந்தவர்தான் முதல்வராக ஆனார் மு.க.ஸ்டாலின். நாட்டு மக்கள் வியர்ந்து பார்க்கக் கூடியவர்தான் தளபதி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40ம், 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சரி, இரண்டு கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் சரி, இடைத்தேர்தல்களிலும் சரி திமுகதான் அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், வருகிற 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் திமுகதான் வெல்லும். தற்போது, தமிழகத்தில் மக்களுக்கு ஏற்றவாறுதான் சட்டமன்றத்தில் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மத்தியில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்தான் தளபதி. மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படும்.

ஜெயலலிதா இருக்கும் வரை அனைத்து திட்டங்களும் ஒழுங்காக இருந்தது. ஆனால் அவர் மறைந்த பிறகு தாலிக்கு தங்கம் திட்டத்தில் ஏழரை லட்சம் மனுக்களை வாங்கி கிடப்பில் போட்டுவிட்டு திமுக மீது அதிமுகவினர் பழியை போட்டுவிட்டனர். ஆனால், அந்த திட்டத்தை புதுமைப்பெண் திட்டமாக மாற்றி திமுக கொண்டு வந்துள்ளது என்றும், இந்தி படித்தவர்கள் எங்கள் வீட்டில்தான் வீட்டு வேலை செய்கின்றனர் என்றும், வாழ்வோ சாவோ, ஆட்சி இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, மக்களோடு மக்களாக வாழ்வதுதான் திமுக என்றும் அவர் பேசினார். இதில், திமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், நகர இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, வாக்கு சாவடி பாகநிலை முகவர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில், நகர துணை செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

The post முதலமைச்சர் பிறந்தநாள் விழா ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Guduvanchery ,Ministers ,Tha.Mo.Anparasan ,Geetha Jeevan ,Kanchipuram North District ,Nandhivaram ,City DMK ,Tamil ,Nadu ,M.K.Stalin ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...