மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள் பல உள்ளன. அதில்,மிக முக்கிய ஆன்மிக தலமான மேல்மருவத்தூர், சுற்றுலா தலமான மாமல்லபுரம் உலகளாவிய புகழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், வெளிநாடு, வெளிமாநிலங்கள், மாவட்ட மக்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவியும் இடங்களில் இவை மிகவும் பிரபலமானவை. இதனிடையே, பல்வேறு இடங்களில் இருந்து மேல்மருவத்தூருக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம்முடித்து கொண்டு, மாமல்லபுரம் கடற்கரை கோயில் உள்ளிட்ட ஐந்து ரதங்களை சுற்றி பார்க்க செல்கின்றனர்.அதற்காக, மாமல்லபுரம் செல்ல மதுராந்தகம் அல்லது செங்கல்பட்டு சென்று அங்கிருந்து பேருந்து பிடித்து செல்ல வேண்டும். மேலும், சிலர் இடைக்கழிநாடு எல்லையம்மன் கோயில் சென்று மாமல்லபுரம் செல்ல வேண்டும்.
மேல்மருவத்தூரில் இருந்து இந்த இரண்டு வழியாக பேருந்து பிடித்து மாமல்லபுரம் செல்ல வேண்டும். இதனால், காலவிரயமும், பண விரயமும் ஏற்படுகிறது என பயணிகள், பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மேல்மருவத்தூரில், இருந்து சேத்துப்பாக்கம், சித்தாமூர், ஓணம்பாக்கம், அரியனூர், பவுஞ்சூர், கூவத்தூர் கல்பாக்கம் வழியாக வழியாக மாமல்லுபுரம் செல்ல அரசு பேருந்து இயக்க வேண்டும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் என கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, மதுராந்தகம் பணிமனையில் இருந்தும், கல்பாக்கம் பேருந்து பணிமனையில் இருந்தும் அரசு பேருந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட பணிமனைகளில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
The post மேல்மருவத்தூரில் இருந்து சித்தாமூர், ஓணம்பாக்கம், பவுஞ்சூர் வழியாக மாமல்லபுரத்திற்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுமா? சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.
