×

ஒடிசாவில் சுரங்க ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு

புவனேஷ்வர்: ஒடிசாவில் சுரங்க ஊழல் வழக்கில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். ஒடிசாவில் கியோஞ்சர் மாவட்டத்தில் காந்தமர்தன் லோடிங் ஏஜென்சி மற்றும் போக்குவரத்து கூட்டுறவு சங்கத்தில் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிப்ரவரியில் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பிஜூ ஜனதா தளத்தின் இளைஞரணி துணை தலைவர் சவும்யா சங்கர் சக்ராவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் பத்ரி நாராயண் பத்ரா, ‘‘அப்போது இருந்த மாவட்டகலெக்டர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சவும்யா சங்கருக்கு முழு பாதுகாப்பு அளித்தனர். கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோரும் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கனிமங்கள், நிதி முறைகேடுகள் மற்றும் லஞ்சப்பணத்தில் இருவருக்கும் பங்கு இருந்தது” என்ற குற்றஞ்சாட்டியுள்ளார்.

The post ஒடிசாவில் சுரங்க ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு appeared first on Dinakaran.

Tags : Odisha ,IAS ,Bhubaneswar ,Kanthamardhan Loading Agency ,Transport Cooperative Society ,Keonjhar ,Dinakaran ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...