×

5 டெஸ்லா காருடன் வந்த எலான் மஸ்க்: சிவப்பு நிற காரை தேர்வு செய்த டிரம்ப்

வாஷிங்டன்: 5 டெஸ்லா காருடன் வெள்ளை மாளிகைக்கு எலான் மஸ்க் சென்ற நிலையில், அவற்றில் சிவப்பு நிற காரை டிரம்ப் விலைக்கு வாங்கினார். அமெரிக்க அதிபர் டிரம்பின் வெள்ளை மாளிகை நேற்று டெஸ்லா கார்களுக்கான காட்சியகமாக மாறியது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், திடீரென ஐந்து கார்களுடன் அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வந்தார். டிரம்பும், எலான் மஸ்கும் தெற்கு புல்வெளியில் ஐந்து கார்களுடன் போஸ் கொடுத்தனர். அதன்பிறகு எலான் மஸ்க், டிரம்பிடம் ‘உங்களுக்கு பிடித்த காரைத் தேர்வு செய்யுங்கள்’ என்றார். அப்போது டிரம்ப், தனக்கு பிடித்த சிவப்பு நிற காரை தேர்வு செய்தார். அந்த காரில் அமர்ந்த டிரம்ப், ‘இந்த கார் மிகவும் அழகாக இருக்கிறது’ என்றார்.

தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்குடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது டிரம்ப் கூறுகையில், ‘இந்த காருக்கான காசோலையை எலான் மஸ்கிடம் வழங்குகிறேன். இதன் விலை சுமார் $80,000 ஆகும். இந்த கார் டெஸ்லா நிறுவனத்தின் சிறந்த வடிவமைப்பு. டெஸ்லா நிறுவனம் மேலும் வளரும்’ என்று வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இருவரும் செய்தியாளர்கள் முன்னிலையில் ஜாலியாக பேசிக் கொண்டனர்.

The post 5 டெஸ்லா காருடன் வந்த எலான் மஸ்க்: சிவப்பு நிற காரை தேர்வு செய்த டிரம்ப் appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,Tesla ,Trump ,Washington ,White House ,US ,President Trump ,Dinakaran ,
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...