×

துறையூர் அருகே இமயம் வேளாண்மை கல்லூரியில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்

 

துறையூர், மார்ச் 12: துறையூர் அருகே உள்ள கண்ணனூர் இமயம் வேளாண்மை கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி செயலாளர் ஆண்டி தலைமை வைத்து கல்லூரி நடைபெற்ற போட்டி வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். கல்லூரி உதவி பேராசிரியர் புருஷோத்தமன் வரவேற்றார். பொறுப்பு முதல்வர் இளம்பரிதி வாழ்த்துரை வழங்கினார்.

விழாவுக்கு சிறப்பு அமைப்பாளராக சின்னத்திரை நடிகை சசிலயா மற்றும் பிஷ்ஷா சலிம் (ஊக்குவிப்பாளர்) மற்றும் யோக கலை வல்லுனர் சுனைந்திரா, ஏஜிஎம் ஆர்கானிக் மேலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கல்லூரி பிஆர்ஓ சுகதேவ் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தார். முடிவில் கல்லூரி உதவி பேராசிரியர் நன்றி தெரிவித்தார்.

The post துறையூர் அருகே இமயம் வேளாண்மை கல்லூரியில் மகளிர் தினவிழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Women's Day ,Himayam Agricultural College ,Thuraiyur ,Kannanur ,Andy ,Dinakaran ,
× RELATED ரூ.1.17 கோடி கஞ்சா திரவம் பறிமுதல்